இங்கு இணைக்கப்படும் பதிவுகளில் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

Friday, January 20, 2012

தமிழ் எண்கள்

இந்த தகவல்கள் முகப்புத்தகத்தில் பல நண்பர்களினால் பகிரப்பட்டதில் இருந்து பெறப்பட்டவை. இவற்றில் திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள்.




* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௧0 = 10
* ௨0 = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪0 = 1040
* ௮௲ = 8000
* ௭0௲ = 70,000
* ௯0௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
****************************************************************
ஏறுமுக எண்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -??
***************************************************
இறங்குமுக எண்கள்
1 – ஒன்று3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≍ 6,0393476E-9 –>
≍ nano = 0.0000000011/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்
*****************************************************
அளவைகள்—————-நீட்டலளவு
10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு ==>
10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை
*****************************************
பொன்நிறுத்தல்
4 நெல் எடை – 1 குன்றிமணி
2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்
********************************************
பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்
*********************************************
முகத்தல் அளவு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
***********************************
பெய்தல் அளவு
300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி.


20-01-2012


முகத்தல் அளவைகள்
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்


28-01-2012

2 comments:

இதைப்பார்க்கும் போது மற்ற எல்லாவற்றையும் விட முதலில் தோன்றியது தமிழ்தான் என்று எண்ணத்தோன்றுகிறது. பயனுள்ள தேடல்....

முதல் தோன்றிய மூத்த மொழிகளில் தமிழும் ஒன்று. மற்றைய மொழியை கொண்ட நாகரிகங்களை விட தமிழர்களின் நாகரிகள் விசாலமானது. அறிவியல் ரீதியாக பல பரிமானங்களை கண்ட தமிழினம் பல இயற்கை சீற்றங்களால் அழிவடைந்தது மட்டுமல்லாது தனது பல முக்கிய ஆவணங்களையும் தொலைத்து நிற்கிறது இன்று.

தொடர்ந்து தேடுவோம். வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More