எமது வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

தமிழ் மற்றும் தமிழர்களின் வரலாறுகளை தேடிப்பார்ப்பதற்கான சிறிய முயற்சியே இது. தமிழினம் எல்லா பக்கங்களாலும் அழிக்கப்ட்டு வரும் நிலையில் ஈழத்தில் தமிழர்களின் வரலாறு என்ன என்பதையும் எப்படி வரலாறு மாற்றபபடுகிறது என்பதையும் ஆராய்வதோடு தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர் வரலாறுகள் குறித்தும் இங்கு பேசுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். ஆவணங்கள் அல்லது நீங்கள் செவிவழியாக ஏதும் அறிந்திருந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி webkuru@gmail.com
இங்கு இணைக்கப்படும் பதிவுகளில் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

Saturday, January 28, 2012

ஆஸ்த்திரேலியாவை சார்ந்த பழங்குடிகள் இவர்கள்


ஆஸ்த்திரேலியாவை சார்ந்த பழங்குடிகள் இவர்கள். இவர்கள் பேசும் மொழி தமிழை ஒத்து உள்ளது. இவர்களுக்கும் நமக்கும் திராவிட பந்தம் உள்ளது. குமரிகண்டத்தில் ஒன்றாக இருந்து பிரிந்திருக்கலாம்.

Wednesday, January 25, 2012

ராஜ ராஜ சோழனின் சமாதி


உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன்,1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை ,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு பக்கிரிசாமி எனும் விவசாயிதான் தினமும் மலர் மாலையிட்டு வணக்கம் செலுத்தி வருகிறார்.

சீனாவிலும் தமிழ் எழுத்துகள்


This Tamil Language inscription was found in China. It was found about 500 miles north of Canton, in a place called Chuan Chou. This is a port city. It was an important port city in the ancient times also.
Ref : Face Book

இது குறித்த மேலதிக தவல்கள் அல்லது விமர்சனங்கள் இருப்பின் கருத்திடுக.

சிவ மேனகை எழுதும் "ஈழ வம்சம்" தகவல் குறிப்பு_தொடர்சி 3


5. போதியத் திரு நிழல், புத்தரும் , ஞானபோதனை பெற்ற நாகர்களும்.

பௌத்தம் என்பது மதவெறியும் இனவெறியும் கொண்ட சில மனிதர்கள் சொல்வது போல் ஒரு மதம் அல்ல.மனித மனத்தின் ஆழ்ந்த அறிவின் மூலம் பகுத்து அறிந்து கொள்ளும் தெளிவான அறிவியல் ஞானம்.புத்தம் என்பது உண்மையை உணர்தல் என்பதால் பௌத்தமும் புத்தமும் ஒன்றாகின்றது. உண்மையை உணர்ந்தவர் என்பதால் சித்தார்த்தர்.புத்தராகினார் .,அந்த வரலாற்றை பார்ப்போம்,

உலகில் ஒரே ஒரு இந்துக்களின் தேசம் என்று இன்று சொல்லப்படுகின்ற நேபாளத்தில் உலும்பினி என்ற இடத்தில் சாக்கிய குல மன்னர் சுத்தோதனருக்கும் மாயாதேவிக்கும் அரச குமாரனாக சித்தார்த்தர் கி மு 563 ஆண்டு வைகாசி மாதம் முழு நிலா நாளில் பிறந்தார் . புத்தர் பிறந்த இடம் வட இந்தியாவின் ஒரு பிரதேசமாய் முற்காலத்தில் இருந்தது.சித்தார்த்தர் முறைப்படி போர் பயிற்சிகளையும் பெற்றார்.முறைப்படி முறைப்பெண் யசோதையை திருமணம் செய்து இல்லற வாழ்விலும் இணைந்து இருந்தார். இவர்களுக்கு இராகுலன் என்றொரு மகனும் பிறந்தான் .இவ்வாறு மகிழ்சியாக வாழ்ந்து வந்த சித்தார்த்தர் நகர உலாப்போகும் வேளையில் மனித வாழ்வின் பிறப்பில் இருந்து இறப்பு வரையான சகல காட்சிகளையும் கண்டார் கண்ட காட்சிகள் அவரை சிந்திக்க வைத்தது.இல்லற வாழ்வில் இருந்து விடுபட்டு துறவி ஆகின்றார்.உருவலோ என்ற காட்டில் ஆல மரத்தின் கீழ் இருந்து 6 வருடம் தியானம் செய்தார்.அந்தவேளையில் சுயாதை என்று ஒரு பெண் ஒரு பாத்திரத்தில் பாயாசம் கொண்டு வந்து ஆலமரத்தின் கீழ் இருந்த புத்தரிடம் பாயாசத்தை கொடுத்து சென்றாள். அதாவது அந்த பெண் சிறந்த கணவரும் சற் புத்திரனும் தனக்கு கிடைத்தால் ஆலமரக்கடவுளுக்கு அமுது கொடுப்பதாக நெய்வேத்தியம் வைத்து இருந்ததால் ,ஆலமரத்தின் கீழ் அந்த வேளையில் புத்தர் தியானத்தில் இருந்ததால் அவரிடம் கொடுத்தாள்.

சுயாதை கொடுத்த பாயாசத்தை எடுத்து சென்று ஒரு அரச மர நிழலில் இருந்து பருகினார் . பருக பருக பாயாசம் குறையாததை கண்டு வியப்புற்றார் . விரும்பிய வேளைதோறும் அந்த இனிமையான பாயாசத்தை அருந்தினார் . .இவ்வாறு 49 நாட்கள் குடித்த பின் பாயசத்தோடு அந்த பாத்திரத்தை நதி நீரில் விட்டு விட்டு தான் ஞானம் பெற்றவராக இருந்தால் அந்த பாத்திரம் நீரோட்டத்துக்கு எதிர் திசையில் செல்லவேண்டும் என்று தன மனதில் நினைத்து கொண்டார். அவர் நினைத்தது போலவே பாத்திரம் நீரோட்டத்துக்கு எதிர்திசையில் வேகமாக செல்வதை உணர்கின்றார்.இந்த அதிசயத்துக்கு பின் அரச மரநிழலில் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்து உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி மீண்டும் தியானத்தில் இருந்தார். இவரது 36 வயதில் உலக பற்றுகளில் இருந்து முற்றாக விடுதலை அடைந்து நிர்வாண நிலையை அடைகின்றார் . அதாவது நான், தான், தனது என்ற நிலையில் இருந்து விடுபடுதல் உலக பற்றுகளில் இருந்து முற்று முழுதாக விடுபட்டு ஞான ஒளியாக எண்ணற்ற உண்மை தத்துவங்கள் நிறைந்த மனிதராக ,புத்தராக ஞானம் பெறுகின்றார் ,,

உலக நலன்களுக்காக தான் அறிந்த மெய் ஞானத்தை மக்களுக்கு அன்புடன் பரிமாறி உலக மக்களை நல்வழி படுத்த விரும்பிய புத்தர் .பல தேசங்களுக்கும் பயணங்களை மேற்கொள்ள எண்ணியவராய் .நீரில் விட்ட பாத்திரம் சென்ற திசையில் புறப்பட்டு வந்தார் . நீரோட்டத்தில் எதிர் திசையில் பயணித்த அட்சய பாத்திரம் ஈழத்தின் நாகதீபத்தின் சிறு தீவொன்றில் கரை ஒதுங்கியது ,உண்மை ஞானத்தை பெற்ற ஞானபோதி புத்தர் இதை அறியாமலா இருந்திருப்பார் .அதுவே அவர் நாகர்கள் வாழும் நம் ஈழ தேசத்தை காண அவரை இங்கே அழைத்துவந்தது என்றால் மிகை ஆகாது .மணி தீவுக்கு வந்து புத்தர் ஒரு ஆற்றோரமாய் கிடந்த அட்சயபாத்திரத்தை ஒரு சிறுவன் கையில் கொடுத்தார் பசித்தோர்க்கு உணவு அளிக்கும் படி அச்சிறுவனுக்கு அன்பாக சொன்னார் .அனைவருக்கும் உணவு அளிக்க கூடிய அட்சய பாத்திரம் மணித்தீவில் இருந்தாலும் ,வறுமை அவர்களை நெருங்காது என்று அந்த ஞானி உணர்ந்து இருந்தாலும் ,சகோதர அரசுகளுக்கு இடையில் மிக பெரிய போர் ஒன்று தொடங்க போவதை உணர்ந்த புத்தர் ,புண்ணிய பூமி ,புண்ணிய நகர் .என்று பண்டைய நாளில் அழைக்க பட்ட நாக தீபத்தின் மேற் பகுதிக்கு சென்றார் . .

ஏற்கனவே சொல்லி விட்டேன் பௌத்தம் என்பது புத்தர் வாழ்ந்த காலத்தில் ஒரு மதம் அல்ல ,புத்தர் என்பவர் அறிவியல் தத்துவங்கள் உண்மைகள் தெரிந்த ஒரு மகானே தவிர ஒரு கடவுள் அல்ல ,உலக வரலாற்றில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக ஈழத்துக்கு வந்த முதலாவது பெருமகன் என்று சொல்லலாம் ,நாக அரசர்கள் குலோதரனும் ,அவன் மாமன் மகோதரனும்,மகோதரனின் தந்தை அரசாண்ட காலத்தில் இருந்த நவ இரத்தினங்களால் செய்யப்பட்ட பீடத்துக்காக போராட தயாரானார்கள் போராட தயாரான வேளையில் தான் புத்தர் அங்கு பேரொளியுடன் தோன்றினார் பேரொளியை கண்ட நாகர்கள் .போரை நிறுத்தி புத்தரை அணுகினர் ,புத்தர் அவர்களுக்கு போதனை செய்தார் .நாம் இன்னொருவருடைய பொருளுக்கு ஆசை கொள்ளல் ஆகாது .ஆசையே வாழ்வியலில் துன்பங்களை வரவைக்கின்றது . வணக்கத்துக்கு உரிய இந்த நவரத்தின பீடம் உங்களுக்கு உரிமை ஆனது அல்ல . உங்கள் மூதாதையினரால் பேணி பாதுகாக்க பட்டு மட்டும் வந்தது . இதை நானும் ஏற்றுகொள்ள முடியாது .இது அனைத்து குடிகளினதும் வணக்கத்துக்கு உரியது .உங்களுடைய மணித்தீவில் இருக்கும் உலகமகாதேவி நாக ராஜேஸ்வரி அமர்ந்திருந்த சக்தி பீடம் .என்று அதன் அடையாளங்களை அறிமுகம் செய்து பெண் தெய்வத்துக்கு உரியது என்பதையும் தெளிவு படுத்தி இது இந்திரனால் சக்திக்கு அமைத்த திருக்கோவிலில் சக்தி பீடத்தில் இருந்தது என விளக்கம் அளித்து முறைப்படி அதை வைத்து வணங்குமாறு கூறி சென்றார்.


ஈழத்தில் பூர்வீக மக்களின் கலை கலாசாரம் பண்பாடு உறவு முறை ,வழிபாட்டு முறை பற்றி வளரும் தொடரில் பார்ப்போம்.
தொடரும்..... 


26-01-2012

Tuesday, January 24, 2012

சிவ மேனகை எழுதும் "ஈழ வம்சம்" தகவல் குறிப்பு_தொடர்சி 24. ஆண்ட பரம்பரையும் ஆப்கானிஸ்தான் விஜயனும் ,,,,

நாக தீபம் ,என்று பூர்வீக தமிழ் மக்களால் அழைக்கபட்ட ஈழத்தின் வடபகுதியில் வலிமை பெற்ற நாகர்களின் சாம்ராச்சியம் இருந்தது .குமரி கண்டமாக இருந்த காலத்தில் நாக நாடு என்றும் அழைக்கபட்டது. பின்னர் கடல்கோளால் அழிவுற்று எஞ்சிய பகுதி நாக தீபம் ,என்றும் பிற்காலத்தில் மணிபல்லவம் என்றும் அழைக்கபட்டது .குமரிகண்டமாக இருந்த காலத்தில் நாகர்கள் கடலுக்குள் கூட மிகப்பெரிய நாக ரத்தினங்களால் ஆன அரசமாளிகையை அமைத்து அரசாண்டதாக வரலாறுகள் உள்ளது ,இதனால் தான் ஈழத்துக்கு இரத்தினதுபீபம் என்று பெயர் வந்ததாகவும் இருக்கலாம் ,,மகாபாரதம் புனை கதை என்று நாம் எடுத்து கொண்டாலும் முழு பூசணிக்காயை ஆரியர் முழுமையாக மறைக்கவில்லை ,உதாரணமாக பாண்டவர்களில் ஒருவனான வீமனுக்கு நஞ்சுகலந்த பாயாசத்தை கொடுத்து மயங்கிய வீமனை பாயினால் சுற்றி துரியோதனனும் அவன் தம்பி துச்சாதனனும் கடலில் போட்டார்கள் . அவனை நாகலோகத்து நாகர்கள் காப்பாற்றி கொண்டுவந்து விட்டார்கள் . அப்பொழுது நாகலோகத்தை ஆண்டது ,பாண்டவர்களின் தாய் வழி தாத்தா என்பதும் மகாபாரதம் சொல்லும் கதை ,எங்கோ ஒரு முலையில் மறைக்க பட்ட உண்மை வேறு வழியில் வெளிவந்தது என்றும் எடுத்துகொள்ளலாம்.

இருந்தாலும் பல்வேறு வகையான சான்றுகளை வைத்து பார்க்கும் போது நாகர்கள் விஜயன் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த காலத்திலும் புத்தர் நாகதீபத்துக்கு வந்ததாக கருதப்படும் காலத்திலும் அதாவது கி மு 5 ம் 6 ம் நூற்றாண்டு காலத்திலும் ஈழத்தில் வல்லமை பொருந்திய அரசர்களாய் இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

மகோதரன் என்ற நாக அரசன் மிகவும் வலிமையான அரசை கி மு 6 ம் நூற்றாண்டு அளவில் நாக நகர் அல்லது புண்ணிய நகர் என்று அழைக்கபட்ட இன்றைய யாழ்பாணத்தின் மேற்பரப்பில் இருந்து ஆண்டான் என்றும் இது பிற்காலத்தில் நாக குத்தன் அரசாண்ட வேளையில் கதிர மலை இராச்சியம் என்று அழைக்கபட்டது ,ஈழத்தின் மத்திய பகுதியின் மேற்பகுதியை அதாவது மணி மலை ,மகேந்திரமலை ,கண்ணவதமான மலை என்று சொல்லப்படுகின்ற பகுதியை மகோதரனின் தங்கையின் மகன் குலோதரன் ஆண்டதாகவும் தென் பகுதியில் கல்யாணி இராசியத்தை மகோதரனின் தாயின் சகோதரன் மணியசிகனும் ஆண்டதாக வரலாறு சொல்கின்றது ,,

வரலாறு இவ்வாறு சென்று கொண்டு இருக்கும் வேளையில் விஜயன் ,எவ்வாறு ஈழத்தின் முதல் மன்னாக இருக்க முடியும் ,திரிப்பு மகாவம்ச தேரரே சொல்கின்றார் ,30 வருடங்கள் ஆண்டான் என்றும் பின்னர் அரசாள வம்சம் இல்லாததால் தம்பி மகனை கலிங்க நாட்டில் இருந்து அழைத்தான் என்றும் இதில் இருந்தே தெரிகின்றது ,அவன் குவேனியின் சிற்றரசை அபகரித்து சிறிது காலம் பாண்டியரின் உதவியோடு ஆண்டு இருக்கலாம் ,ஆண்ட இராச்சியம் பற்றிய ஆதாரங்கள் பெயர் கூட இல்லாத இடத்தில் முப்பது வரிடம் ஈழத்தை ஆண்டான் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று , சிறிதுகாலத்தில் பின் இயக்கர்கள் நாகர்களின் உதவியுடன் விஜயனையும் அவனது தோழர்களையும் பாண்டிய பரிவாரங்களையும் முற்றாக அழித்து தமது நாட்டை மீட்டு இருப்பார்கள் என்று கருத இடம் இருக்கின்றது ,இதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை கருதுகோளின் அடிப்படையில் ஊகிக்க முடிக்கின்றது ,

ஒற்றுமையாக சிறந்த அரசியல் அடித்தளத்தோடு நாகர்களில் இருந்துதான் நாகரீகம் என்ற சொல் உருவாகியது என்று குறிப்பிடும் அளவுக்கு சிறந்த கலாசாரத்தோடு அரசாண்ட நாகர்களை பற்றி புத்த பெருமான் ஞானத்தால் உணர்கின்றார் இவர்களுக்கு ஒரு இருண்ட காலம் வரப்போவதை தெரிந்துகொண்ட புத்த பெருமான் ,,நாகதீபத்துக்கு வருவதை ,,,வளரும் தொடரில் மலரும் ஞானபோதனை துளிகளோடு பார்ப்போம் ,,,


தொடரும் 

24-01-2012

சிவ மேனகை எழுதும் "ஈழ வம்சம்" தகவல் குறிப்பு_தொடர்சி 1

முகப்புத்தகத்தில் "சிவ மேனகை" என்பவர் "ஈழ வம்சம்" எனும் தலைப்பில் எழுதிவரும் தகவல் குறிப்பு. மேலதிக விவாதங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றல்களுக்காக இங்கு இணைக்கிறேன். அவருடைய முகப்புத்தக முகவரிக்கு தொழினுட்ப காரணங்களினால் என்னால் தகவல் அனுப்ப முடியாமல் இருக்கிறது. முடிந்தால் அவரது பதிவு இங்கு தரவேற்றப்பட்டிருக்கிறது என்ற தகவலை அனுப்பிவிடுங்கள். (http://www.facebook.com/photo.php?fbid=241810355897289&set=a.241810282563963.56598.100002049785074&type=1&ref=nf)1 ,ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள்

குமரிக்கண்ட கடல் கோள் உருவாகுவதற்கு முன்னரே கடல் கொண்ட அதாவது கடலால் அழிவுற்ற நாடுகளும் ஒன்றாக இருந்த இலங்கையில் வாழ்ந்த மக்களாக ,நாகர்கள் ,இயக்கர்அதாவதுயக்க்ஷர்கள்,
வேடர்கள் ,இடையர்கள் ,அமானுயர்கள் ,என்ற இனங்களை சேர்ந்தவர்கள் ,வாழ்ந்த தற்கான ஆதாரங்களை அகழ்வாராய்சிகளும் ,அவற்றில் கிடைத்த ஆதார சான்றுகளும், பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் கூறி உள்ள கருத்துக்களும், மெய்பித்தே நிற்கின்றது .இதை உண்மை படுத்த இந்த இனத்தவர்கள் அவர்கள் அறிவுக்கு எட்டியவகையில் எழுதிவைத்த குறிப்புக்கள் ,திட்டம் இட்டு பின் வந்த அரசர்களாலும் அரசியல் ஆளர்களாலும் அந்நிய படை எடுப்பாளர்களாலும் அழிக்கப்பட்டும் சூறை ஆடப்பட்டும் விட்டது எமது துர்அதிஸ்டமே.,,,எஞ்சிய முற்காலத்து தென்னிந்திய மற்றும் ஈழத்தமிழர்களினது குறிப்புக்களும் வரலாற்று நூல்களும் ஜெயவர்த்தனா அரசால் திட்டம் இட்டு யாழ் நூலகம் எரிக்க பட்டபோது அழிந்து விட்டது ,,,

தென்னிந்தியாவில் ஆரம்ப மக்கள் வாழ்ந்த தாக அறியபடுகின்ர அதே காலத்திலேயே ,ஈழத்திலும் மக்கள் வாழ்த்து இருக்கலாம் ஈழத்தின் தெனிந்தியாவுக்கு அண்மித்த அமைவிடத்தை பொறுத்தவரையில் அது சாத்தியமான ஒன்றாகும் ,நாகர்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்தவர் என்பதை துவாரக யுகத்தில் நடந்ததாக கூறும் புனை கதையான மகாபாரதம் கூட நிரூபிக்கவில்லை .மகா பாரதத்தில் கூட நாகலோகத்து நாகர்கள் குந்தி தேவியின் உறவினர்கள் நாகதீபத்தில் வாழ்ந்த தாக தான் அறிய முடிகின்றது .

ஈழத்தில் ஆரம்பத்தில் வாழ்ந்த நாகர்கள் பிற்காலத்தில்அரசர்கள் இராஜ ரட்டை என்று அழைக்க பட்ட ஈழத்தின் வடபகுதிலேயே அதிகமாக வாழ்ந்ததாக கருதப்படுகின்றது .இவர்கள் நாகதீபம் அதாவது யாழ்குடாநாடு கடலால் பிரியும் பூநகரிக்கு மேற்பட்ட பிரதேசம் யாழ் தீபகற்பம் இந்த பிரதேசத்தை 26 குறுநில அரசர்களை கொண்ட நாக அரசர்கள் நீதி தவறாமல் ஆண்டு வந்தார்கள் .இவர்கள் தன்னிறைவு கொண்டவர்காகவும் பண்டமாற்று மூலம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தவர்களாகவும் தங்களுடைய தனித்துவமான நாகரிக ஒழுங்கில் வாழ்ந்தவர்களாகவும் ,உறவுமுறைகளில் திருமண பந்தங்களை முறைப்பெண் திருமணம் ,செய்து வந்து வந்தார்கள் ,இயற்கை வழிபாட்டோடு சேர்ந்த தாந்திரிய சைவத்தின் சிவ சத்தி வழிபாட்டையும் நாக பாம்பினை வழிபடும் மரபினையும் கொண்டு இருந்தார்கள்


நாகர்கள் பேசும் மொழியாக தமிழ் மொழியை பேசினார்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நிய மொழிகளையும் சகோதர மொழிகளையும் பேசுபவர்களாகவும் இருந்து இருக்கலாம்

ஆரம்பத்தில் வாழ்ந்த யச்ஷர்கள் இனம் .இவர்கள் மாதோட்டம் எனப்படுகின்ற மன்னார் மேற் பகுதியிலும் அனுராத புரம் போன்ற காடுகளை அழித்து உருவாக்கிய பிரதேசங்களிலும் அந்த பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களிலும் வாழ்ந்தார்கள் .இவர்களும் தனித்துவமான இன அடையாளங்கள் கொண்டவர்கள். இவர்கள் குவேனியின் மூதாதையரின் வம்சத்தினை அரச வம்சமாக கொண்டு இருந்தாலும் ஒரு அரசை ஏற்றுகொள்ளும் மனபாங்கு இல்லாத காரணத்தால் ஈழத்தின் ஏனைய பிரதேசங்களையும் காடுகளையும் அழித்து அப்பிரதேசங்களிலும் தமது வாழ்விடங்கள் ஆக்கினார்கள் இதனால் ஈழத்தின் தென் பகுதியிலும் வாழ்விடங்களை அமைத்து கொண்டார்கள்,இவர்கள் உறவு முறை பந்தங்களில் தனித்துவமான பாரம்பரிய கட்டுபாடுகளை கொண்டு இருக்கவில்லை ,திருமண பந்தங்களில் யாரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளும் வழக்கத்தில் வாழ்ந்தார்கள் ,இவர்கள் இயற்கை வழிபாட்டோடு சத்தி வழிபாட்டையும் கொண்டு இருந்தார்கள் இவர்கள் ஏலு மொழியையும் தமிழ் மொழியையும் பேசினார்கள் பொருளாதாரத்தை இவர்களும் பண்டமாற்று மூலமும் தன்னிறைவு தொழில்களின் மூலமும் மேம்படுத்தி வாழ்தார்கள்.

இவர்களே அரை மொட்டை அடித்த நிலையில் நாடு கடத்தப்பட்டு வந்த விஜையனுக்கும் 700 தோழர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து ஈழத்தின் அழிவுக்கு உதவினார்கள் ,இது பற்றி பின்னர் விரிவாக பாப்போம்

அடுத்து ஆரம்பத்தில் வாழ்த்த குடிகள் ,,வேடர்கள், இடையர்கள் ,இவர்கள் காடுகளிலேயே வேட்டையாடி மர உரி தரித்தவர்களாக வாழ்ந்தார்கள் .இவர்கள் கொடிய விலங்குகளிடம் இருந்து மற்ற இனங்களை காத்தவர்கலாகவும் இருந்தார்கள் ,இவர்கள் பலகாலமாக தங்கள் தனித்துவத்தை இழக்காமலேயே இருந்தார்கள் இவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் ஈழத்தில் காடுகளில் வாழ்கின்றார்கள் இவர்கள் கதிர்காமத்தை அண்டிய காட்டு பகுதிகளில் வாழ்ந்ததாகவும் ,முருகப்பெருமானையும் ,இயற்கை தெய்வங்களையும் வழிபடும் முறையை கொண்டு இருந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ,

ஈழவம்சத்தினர் தாங்கள் தங்களுக்கு உரிய தனித்துவத்தோடு ,தமது தேவைகளில் மற்றவர்களில் தங்கி வாளாமால் தம் நிறைவு செய்து ,தமக்கான நாகரீக ஒழுங்கில் இஷ்ட தெய்வங்களை வணங்கி வாழ்ந்து கொண்டு இருந்த வேளையில் தான் குற்ற தண்டனையாக அரை மொட்டை விஜயன் ,700 தோழர்களுடன் கி .மு 6 ம் நூற்றாண்டு அளவில் கலிங்க நாட்டில் இருந்து மாதோட்டத்தில் வந்து இறங்கினான.
இந்த முத்திரை விஜயன் வருகை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டு பின் மீளப்பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார் "சிவ மேனகை" இது தொடர்பாக ஏம் தகவல் இருப்பின் கருத்திடுங்கள்.

2 விஜயன் வரலாறும் அவன் வருகையும்

கலிங்கம் ,அதாவது மழையும் புயலும் அடித்தால் வெள்ள நிவாரணம் கேட்கும் இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலம் இது தான் மகாவம்சம் கூறும் சிங்களத்தின் தந்தை நிலம் ,,தாய் நிலத்துக்கு பாண்டி நாட்டு பெண்களும் இயக்க அரசி குவேனியும் பங்கு கேட்பதால் தாய் நிலம் எதுவென்பது குழப்பமாகவே இருக்கின்றது ,

விஜயனின் தாத்தா ஒரு காடுகளில் வாழும் ஒரு உண்மையான சிங்கம் விதிவசத்தால் வங்கதேசத்து குறுநில மன்னனுக்கும் கலிங்க இளவரசிக்கும் பிறந்த மகளை சிங்கம் திருமணம் செய்கின்றது ,அவர்கள் இருவரும் செய்த தவப்பயனால் இரு பிள்ளைகள் பிறக்கின்றனர் மகன் பெயர் சிங்க பாகு ,மகள் பெயர் சிங்க சிவலி ,,இவர்களின் தரம் கேட்ட பண்பாடு அன்றே ஆரம்பமாகின்றது அரசகுமாரனுக்கு நாட்டில் வேறு பெண்கிடைக்காமலோ என்னவோ எனக்கு புரியவில்லை தன் சகோதரியையே தான் திருமணம் செய்கின்றான் இவர்களுக்கு 16 இரட்டை பிள்ளைகள் மொத்தமாக 32....பிள்ளைகள் பிறக்கின்றார்கள் இவர்களில் மூத்தவனே விஜயன் இவனே கலிங்க நாட்டு பட்டத்து இளவரசன்

விஜயன் தன் தோழர்களுடன் சேர்ந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளில் கெடுதல் செய்து துன்பங்களை கொடுத்தான். நாட்டில் மது மாது இவன் உடைமையாய் இருந்தது ,,மக்களை இவன் அடிமையாய் எண்ணினான் ..இதனால் துன்பம் அடைந்த மக்கள் சிங்கபாகு அரசனிடம் மகன் செய்யும் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் படி கேட்டதால் ,மன்னன் தன் பாச மகன் தவறு செய்தவன், ஆயிலும் கொல்ல மனம் இன்றி தண்டனையாக விஜயனுக்கும் அவரது 700,,தோழர்கள் உதவியாளர்களுக்கும் அரை தலையை மொட்டை அடித்து கட்டாயபடுத்தி கப்பலில் ஏற்றி நாடு கடத்தினான் .

மகாபாரத்தில் வரும் நாசகாரி வஞ்சக சகுனியினதும் காந்தாரியுடையதும் பூர்வீகமே காந்தாரதேசம் ,.சிம்மபுர என்கின்ற இன்றைய ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட பகுதி, இங்கிருந்து புறப்பட்டு விஜயனும் அவன் தோழர்களும் திசை தெரியாத கடலில் மண் திடல் தேடி கி மு 543 இல் மாதோட்டத்தில் கரை ஒதுங்கினார்கள் ,,

பூர்வீக தமிழர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் இவர்கள் வந்திறங்கியதை ஏற்றுகொள்ள மனம் இல்லாத மாகாவம்ச புனை கதை திரிபு வாதிகள் தம்ப பன்னி என்கின்ற தென்பகுதியில் வந்து இறங்கியதாக கட்டு கதை விட்டார்கள் .இவ்வாறு நாடுகடத்தப்பட்டு வந்தவன் மாதோட்டத்தில் அரசாண்ட குலம் அதாவது ஆரியனிடம் கையூட்டு பெற்று இராமாயணம் எழுதிய கம்பன் ,இயக்கர் கோனை ,அரக்கர் கோன்,என்றான் அதுபோலவே அதே குல இளவரசி குவேனியை சாதாரண பெண்ணாக தேரர் மகாவம்சம் எழுதினார்

விஜயன் தன்னை சிறந்த அரசகுமாரனாக அங்கு அறிமுகம் செய்து நாடகமாடி குவேனியை மயக்கி திருமணம் செய்தான். ,சிற்றின்பத்தில் சீரழிந்து நாடுகடத்தப்பட்டு வந்த இவன் தமிழர் பண்பாட்டை மதிப்பானா ஒருவனுக்கு ஒருத்தி என்ற இலக்கண வாழ்வில் வாழ்வானா இல்லவே இல்லை .இயக்கர் குல அரசர்களை வஞ்சகத்தால் கொலை செய்து அவர்களுடைய அரசை கைப்பற்றி ,பாண்டி நாட்டு பெண்களை வரவழைத்து மறுமணங்கள் செய்தார்கள் .அன்றில் இருந்தே வந்தேறுகுடிகளான விஜயன் பரம்பரையோடு பாண்டியரும் வந்து சேர்ந்தார்கள் .பாண்டியர்கள் வந்திறங்கிய மாதோட்ட கடல்பரப்பு இந்தியாவின் பொருணை நதியை ஒத்ததாக இருந்ததாலேயே இவ்விடத்தை அவர்கள் தாமிர வர்னி அல்லது தாமிர பரணி என்று அழைத்தார்கள். இதை காரணமாக வைத்தே பிற்காலத்தில் கிரேக்கர்கள் இலங்கையை தப்ர பேன் என்று அழைத்தார்களோ தெரியவில்லை .இதை திரிவு படுத்தி தென்பகுதியோடு ஒப்பிடுகின்றார்கள் .

எலு மொழி பேசிய இயக்கர் குல மக்களோடு கலந்து உறவுகளை உருவாக்கினாலும் சிங்கத்தில் இருந்துவந்த இனம் என்ற தங்கள் அடையாளத்தை எடுத்துக்காட்ட எ லு மொழியோடு சேர்ந்து எவ்வாறு சிங்களம் உருவாகியது?


3 சிங்கள இனத்தினதும் சிங்கள மொழியினதும் தோற்றம்

ஒரு பாரம் பாரிய பூர்வீக இனத்துக்கு தங்கள் வாழ்வியலில் உள்ள கலை ,கலாச்சாரம் ,பண்பாடு, வழிபாட்டு முறை
மொழி ,உணவு முறை, என்பவற்றை மாற்றி கொள்ளவேண்டிய தேவை இருக்காது ,.அந்தவகையில் ஈழத்தின் பூர்வீக குடிகளாக இருந்த தமிழர்கள் தங்கள் கலாச்சார விளுமியங்களுடனேயே தனித்துவமாக வாழ்ந்தார்கள் ,


வந்தேறு குடிகளும் ஆக்கிரமிப்பாளர்களும் ,இனக்கலப்பை ஏற்படுத்தும் இனங்களுமே தங்களுக்கு உரிய தேசிய அடையாளங்களை புகுத்தி முன்னம் அந்த தேசத்தில் இருந்த அடையாளங்களை அழித்து விடும் முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் .,அதையே விஜயன் குழுவினரும் செய்தார்கள் சிகல அல்லது சிகள என்ற அவர்களது தாயக பெயரையும் எலு என்கின்ற இயக்கர்களுடைய மொழியையும் சேர்த்து ,சிகள எலு ,என்று ஒரு கலப்பு ,மொழியை பேசினார்கள்.,சிகள எலு ,மொழி வங்காள மொழியையும் பாளி மொழியையும் ஒத்ததாக இருந்திருக்கலாம் ,,,,எலு மொழியின் சாயல் சேர்ந்து இருப்பதால் எலு மொழியில் ஏற்கனவே பெருவாரியாக தமிழ் மொழி கலந்திருப்பதால் தமிழ் சொற்களும் இதில் அடங்கியது பிற்காலத்தில் இதை அடிப்படையாக வைத்தே தேரர் மகாவம்சத்தில் பிற்காலத்தில் சிங்களம் என்று மொழியையும் அந்த மொழி பேசியவர்களை அடிப்படையாக கொண்ட இனத்தை சிங்களவர் என்றும் அழைத்தனர் ,,சிங்களவரின் பேச்சு வழக்கிலும் உறவு முறை ,எண்கள் ,கிழமை நாள் போன்றவற்றில் பல்வேறு மொழிகலப்பு இருப்பது சாதாரணமாகவே தெரிகின்றது ,,

விஜயன் வஞ்சக சூழ்சிகள் செய்து இயக்கர் குல அரசர்களை கொலை செய்து அரசை கைப்பற்றியதோடு ,இந்த குல மக்களுக்கும் துன்பம் கொடுத்தான் .இந்த துன்பத்தில் இருந்து விடுபடவே பூர்வீக மக்கள் நாகர்கள் வாழும் யாழ் தீபகற்ப பகுதியிலும் தென்பகுதியில் வாழ்ந்த வேடுவர் இடையர் இன மக்களுடனும் கலந்து வாழவும் அவர்கள் பேசிய தமிழ் மொழியை தொடர்சியாக பேசவும் தொடங்கினார்கள் ,விஜயனின் ஆளுகைக்கு உட்பட்ட இயக்க இளவரசிகளும் அவர்களது குடும்பங்களும் விஜயனால் உருவான கலப்பு சிகள எலு ,மொழியை பேசுபவர்களாகவும் வாழ பழகி கொண்டனர் ,விஜயன் வருகைக்கு முன்னம் நின்மதியாக வாழ்ந்த இனம் பிரிவினையில் அகப்பட்டனர் விஜயனை எதிர்த்தோர் ,,நாளடைவில் விஜயனிடம் இழந்த அரசை மீட்க இயக்க குல அரசர்களுக்கும் விஜயன் குழுவினருக்கும் பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றது இந்த போராட்டங்களுக்கு உதவி பெறுவதற்காக ,விஜயன் பாண்டிய மன்னர்களுடன் உறவு பூண்டான் .அவர்களை உதவிக்கு அழைத்தான் ,.அதற்கான நன்றிகடனாகவும் பாண்டிய நாட்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்கள்,. அதனால் பாண்டிய வம்சத்தினரும் விஜயன் குழுவினருடன் பரஸ்பர உறவுகளை பேணி புதிய வம்சமாக உருவாகினார்கள் , வந்தேறு குடியாக வந்த விஜயன் குழுவினரதும் ,அவர்களுடன் உறவுபூண்ட பாண்டியர் களினதும் தவிர்க்க முடியாமல் சேர்ந்து வாழ்ந்த குவேனி பரம்பரை இன் வழித்தோன்றல்களுமே ,சிங்களவர்கள் .

இழந்த அரசை மீள கைப்பற்ற முடியாமல் போகவே பிரிந்து சென்ற இயக்கர்கள் ,தமது பூர்வீக எலு மொழியையும் .படிப்படியாக பேசுவதை விட்டு விட்டார்கள் தமிழையே பேசும் மொழியாக கொண்டார்கள் இதனாலேயே இவர்கள் தமிழ் உச்சரிப்பு சில இடங்களில் வேற்று மொழி தாக்கத்துடன் வருவது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தி வந்தாலும் ,பின்னர் எலு மொழி முற்றாகவே அழிந்துவிட்டது என்றே கருதப்படுகின்றது

காடுகளை அழித்து புதிய இராச்சியங்களை உருவாக்கிய இயக்கர்கள் ஈழத்தின் தென்பகுதிகளிலும் சென்று வாழத்தொடங்கினார்கள் .இவ்வாறு உருவாக்க பட்ட இராச்சியங்களே ,,பின்னர் மகாவம்சம் சொல்லும் சிங்கள மன்னர்கள் ஆண்டார்கள் அவர்களும் முழுமையான சிங்களவர் அல்லர் என்பதை பௌத்த மதம் ஈழத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய காலத்தில் குறிப்புக்களோடு தொடர்புபடுத்தி பார்ப்போம்  .

தொடரும்.

23-01-2012

Friday, January 20, 2012

இலங்கையில் சிங்கள இனம் மற்றும் மொழி எப்பொழுது தோன்றியது?

இலங்கையில் சிங்கள இன மற்றும் மொழி தோன்றல் வளர்ச்சி தொடர்பான ஒரு மீளாய்வு புத்தகம்.
இலங்கையில் சிங்கள இன மொழி தோற்றம் தொடர்பானது


21-01-2012

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More