இங்கு இணைக்கப்படும் பதிவுகளில் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

Wednesday, January 25, 2012

சிவ மேனகை எழுதும் "ஈழ வம்சம்" தகவல் குறிப்பு_தொடர்சி 3


5. போதியத் திரு நிழல், புத்தரும் , ஞானபோதனை பெற்ற நாகர்களும்.

பௌத்தம் என்பது மதவெறியும் இனவெறியும் கொண்ட சில மனிதர்கள் சொல்வது போல் ஒரு மதம் அல்ல.மனித மனத்தின் ஆழ்ந்த அறிவின் மூலம் பகுத்து அறிந்து கொள்ளும் தெளிவான அறிவியல் ஞானம்.புத்தம் என்பது உண்மையை உணர்தல் என்பதால் பௌத்தமும் புத்தமும் ஒன்றாகின்றது. உண்மையை உணர்ந்தவர் என்பதால் சித்தார்த்தர்.புத்தராகினார் .,அந்த வரலாற்றை பார்ப்போம்,

உலகில் ஒரே ஒரு இந்துக்களின் தேசம் என்று இன்று சொல்லப்படுகின்ற நேபாளத்தில் உலும்பினி என்ற இடத்தில் சாக்கிய குல மன்னர் சுத்தோதனருக்கும் மாயாதேவிக்கும் அரச குமாரனாக சித்தார்த்தர் கி மு 563 ஆண்டு வைகாசி மாதம் முழு நிலா நாளில் பிறந்தார் . புத்தர் பிறந்த இடம் வட இந்தியாவின் ஒரு பிரதேசமாய் முற்காலத்தில் இருந்தது.சித்தார்த்தர் முறைப்படி போர் பயிற்சிகளையும் பெற்றார்.முறைப்படி முறைப்பெண் யசோதையை திருமணம் செய்து இல்லற வாழ்விலும் இணைந்து இருந்தார். இவர்களுக்கு இராகுலன் என்றொரு மகனும் பிறந்தான் .இவ்வாறு மகிழ்சியாக வாழ்ந்து வந்த சித்தார்த்தர் நகர உலாப்போகும் வேளையில் மனித வாழ்வின் பிறப்பில் இருந்து இறப்பு வரையான சகல காட்சிகளையும் கண்டார் கண்ட காட்சிகள் அவரை சிந்திக்க வைத்தது.இல்லற வாழ்வில் இருந்து விடுபட்டு துறவி ஆகின்றார்.உருவலோ என்ற காட்டில் ஆல மரத்தின் கீழ் இருந்து 6 வருடம் தியானம் செய்தார்.அந்தவேளையில் சுயாதை என்று ஒரு பெண் ஒரு பாத்திரத்தில் பாயாசம் கொண்டு வந்து ஆலமரத்தின் கீழ் இருந்த புத்தரிடம் பாயாசத்தை கொடுத்து சென்றாள். அதாவது அந்த பெண் சிறந்த கணவரும் சற் புத்திரனும் தனக்கு கிடைத்தால் ஆலமரக்கடவுளுக்கு அமுது கொடுப்பதாக நெய்வேத்தியம் வைத்து இருந்ததால் ,ஆலமரத்தின் கீழ் அந்த வேளையில் புத்தர் தியானத்தில் இருந்ததால் அவரிடம் கொடுத்தாள்.

சுயாதை கொடுத்த பாயாசத்தை எடுத்து சென்று ஒரு அரச மர நிழலில் இருந்து பருகினார் . பருக பருக பாயாசம் குறையாததை கண்டு வியப்புற்றார் . விரும்பிய வேளைதோறும் அந்த இனிமையான பாயாசத்தை அருந்தினார் . .இவ்வாறு 49 நாட்கள் குடித்த பின் பாயசத்தோடு அந்த பாத்திரத்தை நதி நீரில் விட்டு விட்டு தான் ஞானம் பெற்றவராக இருந்தால் அந்த பாத்திரம் நீரோட்டத்துக்கு எதிர் திசையில் செல்லவேண்டும் என்று தன மனதில் நினைத்து கொண்டார். அவர் நினைத்தது போலவே பாத்திரம் நீரோட்டத்துக்கு எதிர்திசையில் வேகமாக செல்வதை உணர்கின்றார்.இந்த அதிசயத்துக்கு பின் அரச மரநிழலில் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்து உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி மீண்டும் தியானத்தில் இருந்தார். இவரது 36 வயதில் உலக பற்றுகளில் இருந்து முற்றாக விடுதலை அடைந்து நிர்வாண நிலையை அடைகின்றார் . அதாவது நான், தான், தனது என்ற நிலையில் இருந்து விடுபடுதல் உலக பற்றுகளில் இருந்து முற்று முழுதாக விடுபட்டு ஞான ஒளியாக எண்ணற்ற உண்மை தத்துவங்கள் நிறைந்த மனிதராக ,புத்தராக ஞானம் பெறுகின்றார் ,,

உலக நலன்களுக்காக தான் அறிந்த மெய் ஞானத்தை மக்களுக்கு அன்புடன் பரிமாறி உலக மக்களை நல்வழி படுத்த விரும்பிய புத்தர் .பல தேசங்களுக்கும் பயணங்களை மேற்கொள்ள எண்ணியவராய் .நீரில் விட்ட பாத்திரம் சென்ற திசையில் புறப்பட்டு வந்தார் . நீரோட்டத்தில் எதிர் திசையில் பயணித்த அட்சய பாத்திரம் ஈழத்தின் நாகதீபத்தின் சிறு தீவொன்றில் கரை ஒதுங்கியது ,உண்மை ஞானத்தை பெற்ற ஞானபோதி புத்தர் இதை அறியாமலா இருந்திருப்பார் .அதுவே அவர் நாகர்கள் வாழும் நம் ஈழ தேசத்தை காண அவரை இங்கே அழைத்துவந்தது என்றால் மிகை ஆகாது .மணி தீவுக்கு வந்து புத்தர் ஒரு ஆற்றோரமாய் கிடந்த அட்சயபாத்திரத்தை ஒரு சிறுவன் கையில் கொடுத்தார் பசித்தோர்க்கு உணவு அளிக்கும் படி அச்சிறுவனுக்கு அன்பாக சொன்னார் .அனைவருக்கும் உணவு அளிக்க கூடிய அட்சய பாத்திரம் மணித்தீவில் இருந்தாலும் ,வறுமை அவர்களை நெருங்காது என்று அந்த ஞானி உணர்ந்து இருந்தாலும் ,சகோதர அரசுகளுக்கு இடையில் மிக பெரிய போர் ஒன்று தொடங்க போவதை உணர்ந்த புத்தர் ,புண்ணிய பூமி ,புண்ணிய நகர் .என்று பண்டைய நாளில் அழைக்க பட்ட நாக தீபத்தின் மேற் பகுதிக்கு சென்றார் . .

ஏற்கனவே சொல்லி விட்டேன் பௌத்தம் என்பது புத்தர் வாழ்ந்த காலத்தில் ஒரு மதம் அல்ல ,புத்தர் என்பவர் அறிவியல் தத்துவங்கள் உண்மைகள் தெரிந்த ஒரு மகானே தவிர ஒரு கடவுள் அல்ல ,உலக வரலாற்றில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக ஈழத்துக்கு வந்த முதலாவது பெருமகன் என்று சொல்லலாம் ,நாக அரசர்கள் குலோதரனும் ,அவன் மாமன் மகோதரனும்,மகோதரனின் தந்தை அரசாண்ட காலத்தில் இருந்த நவ இரத்தினங்களால் செய்யப்பட்ட பீடத்துக்காக போராட தயாரானார்கள் போராட தயாரான வேளையில் தான் புத்தர் அங்கு பேரொளியுடன் தோன்றினார் பேரொளியை கண்ட நாகர்கள் .போரை நிறுத்தி புத்தரை அணுகினர் ,புத்தர் அவர்களுக்கு போதனை செய்தார் .நாம் இன்னொருவருடைய பொருளுக்கு ஆசை கொள்ளல் ஆகாது .ஆசையே வாழ்வியலில் துன்பங்களை வரவைக்கின்றது . வணக்கத்துக்கு உரிய இந்த நவரத்தின பீடம் உங்களுக்கு உரிமை ஆனது அல்ல . உங்கள் மூதாதையினரால் பேணி பாதுகாக்க பட்டு மட்டும் வந்தது . இதை நானும் ஏற்றுகொள்ள முடியாது .இது அனைத்து குடிகளினதும் வணக்கத்துக்கு உரியது .உங்களுடைய மணித்தீவில் இருக்கும் உலகமகாதேவி நாக ராஜேஸ்வரி அமர்ந்திருந்த சக்தி பீடம் .என்று அதன் அடையாளங்களை அறிமுகம் செய்து பெண் தெய்வத்துக்கு உரியது என்பதையும் தெளிவு படுத்தி இது இந்திரனால் சக்திக்கு அமைத்த திருக்கோவிலில் சக்தி பீடத்தில் இருந்தது என விளக்கம் அளித்து முறைப்படி அதை வைத்து வணங்குமாறு கூறி சென்றார்.


ஈழத்தில் பூர்வீக மக்களின் கலை கலாசாரம் பண்பாடு உறவு முறை ,வழிபாட்டு முறை பற்றி வளரும் தொடரில் பார்ப்போம்.
தொடரும்..... 


26-01-2012

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More