இங்கு இணைக்கப்படும் பதிவுகளில் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

Tuesday, January 24, 2012

சிவ மேனகை எழுதும் "ஈழ வம்சம்" தகவல் குறிப்பு_தொடர்சி 24. ஆண்ட பரம்பரையும் ஆப்கானிஸ்தான் விஜயனும் ,,,,

நாக தீபம் ,என்று பூர்வீக தமிழ் மக்களால் அழைக்கபட்ட ஈழத்தின் வடபகுதியில் வலிமை பெற்ற நாகர்களின் சாம்ராச்சியம் இருந்தது .குமரி கண்டமாக இருந்த காலத்தில் நாக நாடு என்றும் அழைக்கபட்டது. பின்னர் கடல்கோளால் அழிவுற்று எஞ்சிய பகுதி நாக தீபம் ,என்றும் பிற்காலத்தில் மணிபல்லவம் என்றும் அழைக்கபட்டது .குமரிகண்டமாக இருந்த காலத்தில் நாகர்கள் கடலுக்குள் கூட மிகப்பெரிய நாக ரத்தினங்களால் ஆன அரசமாளிகையை அமைத்து அரசாண்டதாக வரலாறுகள் உள்ளது ,இதனால் தான் ஈழத்துக்கு இரத்தினதுபீபம் என்று பெயர் வந்ததாகவும் இருக்கலாம் ,,மகாபாரதம் புனை கதை என்று நாம் எடுத்து கொண்டாலும் முழு பூசணிக்காயை ஆரியர் முழுமையாக மறைக்கவில்லை ,உதாரணமாக பாண்டவர்களில் ஒருவனான வீமனுக்கு நஞ்சுகலந்த பாயாசத்தை கொடுத்து மயங்கிய வீமனை பாயினால் சுற்றி துரியோதனனும் அவன் தம்பி துச்சாதனனும் கடலில் போட்டார்கள் . அவனை நாகலோகத்து நாகர்கள் காப்பாற்றி கொண்டுவந்து விட்டார்கள் . அப்பொழுது நாகலோகத்தை ஆண்டது ,பாண்டவர்களின் தாய் வழி தாத்தா என்பதும் மகாபாரதம் சொல்லும் கதை ,எங்கோ ஒரு முலையில் மறைக்க பட்ட உண்மை வேறு வழியில் வெளிவந்தது என்றும் எடுத்துகொள்ளலாம்.

இருந்தாலும் பல்வேறு வகையான சான்றுகளை வைத்து பார்க்கும் போது நாகர்கள் விஜயன் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த காலத்திலும் புத்தர் நாகதீபத்துக்கு வந்ததாக கருதப்படும் காலத்திலும் அதாவது கி மு 5 ம் 6 ம் நூற்றாண்டு காலத்திலும் ஈழத்தில் வல்லமை பொருந்திய அரசர்களாய் இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

மகோதரன் என்ற நாக அரசன் மிகவும் வலிமையான அரசை கி மு 6 ம் நூற்றாண்டு அளவில் நாக நகர் அல்லது புண்ணிய நகர் என்று அழைக்கபட்ட இன்றைய யாழ்பாணத்தின் மேற்பரப்பில் இருந்து ஆண்டான் என்றும் இது பிற்காலத்தில் நாக குத்தன் அரசாண்ட வேளையில் கதிர மலை இராச்சியம் என்று அழைக்கபட்டது ,ஈழத்தின் மத்திய பகுதியின் மேற்பகுதியை அதாவது மணி மலை ,மகேந்திரமலை ,கண்ணவதமான மலை என்று சொல்லப்படுகின்ற பகுதியை மகோதரனின் தங்கையின் மகன் குலோதரன் ஆண்டதாகவும் தென் பகுதியில் கல்யாணி இராசியத்தை மகோதரனின் தாயின் சகோதரன் மணியசிகனும் ஆண்டதாக வரலாறு சொல்கின்றது ,,

வரலாறு இவ்வாறு சென்று கொண்டு இருக்கும் வேளையில் விஜயன் ,எவ்வாறு ஈழத்தின் முதல் மன்னாக இருக்க முடியும் ,திரிப்பு மகாவம்ச தேரரே சொல்கின்றார் ,30 வருடங்கள் ஆண்டான் என்றும் பின்னர் அரசாள வம்சம் இல்லாததால் தம்பி மகனை கலிங்க நாட்டில் இருந்து அழைத்தான் என்றும் இதில் இருந்தே தெரிகின்றது ,அவன் குவேனியின் சிற்றரசை அபகரித்து சிறிது காலம் பாண்டியரின் உதவியோடு ஆண்டு இருக்கலாம் ,ஆண்ட இராச்சியம் பற்றிய ஆதாரங்கள் பெயர் கூட இல்லாத இடத்தில் முப்பது வரிடம் ஈழத்தை ஆண்டான் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று , சிறிதுகாலத்தில் பின் இயக்கர்கள் நாகர்களின் உதவியுடன் விஜயனையும் அவனது தோழர்களையும் பாண்டிய பரிவாரங்களையும் முற்றாக அழித்து தமது நாட்டை மீட்டு இருப்பார்கள் என்று கருத இடம் இருக்கின்றது ,இதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை கருதுகோளின் அடிப்படையில் ஊகிக்க முடிக்கின்றது ,

ஒற்றுமையாக சிறந்த அரசியல் அடித்தளத்தோடு நாகர்களில் இருந்துதான் நாகரீகம் என்ற சொல் உருவாகியது என்று குறிப்பிடும் அளவுக்கு சிறந்த கலாசாரத்தோடு அரசாண்ட நாகர்களை பற்றி புத்த பெருமான் ஞானத்தால் உணர்கின்றார் இவர்களுக்கு ஒரு இருண்ட காலம் வரப்போவதை தெரிந்துகொண்ட புத்த பெருமான் ,,நாகதீபத்துக்கு வருவதை ,,,வளரும் தொடரில் மலரும் ஞானபோதனை துளிகளோடு பார்ப்போம் ,,,


தொடரும் 

24-01-2012

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More