இங்கு இணைக்கப்படும் பதிவுகளில் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

Saturday, January 14, 2012

தமிழ் எப்பொழுது தோன்றியது?

குமாரிக்கண்டம் அல்லது இலமூரிக் கண்டம் என்று அழைக்கப்ட்ட நிலப்பகுதி

சைகை மொழியை  பயன்படுத்திய மனிதன் அதனை தொடர்ந்து பேச்சு மொழிக்கு மாறியிருக்கிறான். அப்படி பேச்சு மொழி உருவாகிய காலங்களில் தோன்றியிருக்க கூடிய ஒரு மொழிதான் தமிழும் என்று நம்பப்படுகிறது.

தமிழின் தோற்றம் "குமரிக்கண்டம்" அல்லது இலமூரியாக்கண்டம்" என்ற பெரும் நிலப்பரப்பை சேர்ந்த மக்களிடையில் தான் முதலில் தோன்றியது என்று நம்பப்படுகிறது.

சுமார் கி.மு 500000 ஆண்டுகளிற்கு முன்பு அவுஸ்ரேலியா தொடங்கி தென்ஆபிரிக்கா வரை விரிந்து கிடந்த (இந்தியா உள்ளிட்ட) நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம் என்று அறிஞர் ஓல்டுகாம் தெரிவித்திருக்கிறார்.

அறிஞர்களான எக்கேல் மற்றும் கிளேற்றர் ஆகியோரின் கருத்துப்படி "சாந்தா தீவுகளில்" தொடங்கி தெற்காசியாவின் தென்பகுதி வழியாக தென் ஆபிரிக்காவின் கீழ்கரை வரை ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததென்றும் அங்கு குரங்கையொத்த "இலமூரியா" (Lemuria) என்ற இனம் வாழ்ந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

(http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent) இந்த இணைப்பில் சென்று  லெமூரியா பற்றிய சில தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். )

தமிழ் மொழியானது கி.மு 500 000 ஆண்டுகளிற்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சுட்டொலிகளில் இருந்து தோன்றியது தான் தமிழ் மொழியின் ஆரம்பம்.

இன்றைய அவுஸ்ரேலியாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட தென் ஆபிரிக்காவரை பரந்து விரிந்து கிடந்த நிலப்பரபில் தனி மொழியாக தமிழ் உருவாகியிருக்கிறது என்றே சொல்லாம். தமிழ் மொழியின் தோற்றம் பற்றி சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல நூல்கள் மூலம் அறிய முடியும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

குமரிக்கண்டத்தை "பழந்தமிழ் நாடு" என்றே பல எழுத்தாளர்கள் தமது எழுதியுள்ளனர். இந்த கண்டத்தில் தனி ஆட்சியாக வாழ்ந்தவன் தான் தமிழன். அவனது நாகரிகம் தான் திராவிட நாகரிகளம் என்று சொல்லப்படுகிறது. தமிழர்களுடைய நாகரிகம் தான் உலகிலேயே பழமைவாய்ந்த நாகரிகமாக நம்பப்படுகிறது.

உலகெங்கும் தனது நாகரிகத்தை விஸ்தரித்து வைத்திருந்தான் தமிழன். அதற்கு சான்றாக "பனீசியர்களின்" நாணயங்களையும் கல்வெட்டுக்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்த குமரிக்கண்டத்தை ஆண்ட தமிழினம் கடல்கோள்களினால் அழிந்து நாசமாய் போனது.  குமரிக்கண்டத்தை நான்கு பெரும் கடல்கோள்கள் அழித்து நாசமாக்கியிருப்பதாக பதிவு செய்துள்ளார்கள்.
நான்கு பெரும் கடல் கோள்கள்

1. தென்மதுரை -கடல் கொண்டது
2.நாகநன்னாட-கடல் கொண்டது
3.கபாடபுரம்- கடல் கொண்டது
4.காவிரிப்பூம்பட்டிணம்-கடல் கொண்டது

தவிர அதிக அளவிலான சிறிய கடல் கோள்கள். இப்படிப்பட்ட பெரும் அழிவுகளினால் நிலம் சிதைக்கப்ட்டதோடு தமிழரின் வரலாற்றுக் குறிப்புகள் ஆவணங்கள் என எல்லாமே கடலுடன் கடலாகவும் மண்ணுடன் மண்ணாகவும் அழிக்கப்ட்டிருக்கிறது.

இந்த கடல்கோள்களினால் தமிழினம் மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகள் உயிரினங்கள் என எல்லாமே அழிந்தது. உலக வடிவமே மாறியது.

முதன்மை நாகரிகமான திராவிட நாகரிகத்தில் காலப்போக்கில் பல மொழிகள் உருவெடுத்தன. எல்லா திராவிடக் குடும்ப மொழிகளுமே தமிழில் இருந்து பிரிந்தவைதான் என்று சொல்கிறார்கள். இலக்கண மற்றும் இலக்கிய ஆயிரக்கணக்கான நூல்களை தமிழ் மொழி மாத்திரம் தான் ஆரம்பத்தில் வைத்திருந்தது என்று நம்பப்படுகிறது.

மா.குருபரன்
14-01-2012

6 comments:

உங்கள் படைப்புக்கள் சிறப்புற அமைய வாழ்த்துக்கள் அண்ணா.

அண்ணா,குமரிக்கண்டமானது இந்தியா உள்ளிட்ட அவுஷ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா கண்டங்களில் காணப்பட்டது என்றால் ஏன் தமிழ் மொழி அத்தகைய நாடுகளில் முக்கிய இடத்தைப் பெறாமல் இந்தியாவில் முக்கிய இடத்தைப் பெற்றது???
இது எனக்கு குழப்பாக் உள்ளது அண்ணா...

சீனு "http://aaivukal.blogspot.com/2012/01/blog-post_16.html" இந்த பதிவில் தரப்பட்டுள்ள "வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்" என்ற புத்தகத்தை படித்து பாருங்கள். உங்களிற்கிருக்கும் குழப்பத்திற்கான பல விடைகள் இருக்கின்றன.

தவிர வேறு சில ஆதாரங்களையும் உங்களுக்கான தனிப்பதிலில் விரைவில் தருகிறேன்.

தொடர்ந்து இங்கு வாருங்கள்.உங்களிடம் ஏதும் ஆவணம் இருப்பின் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

தங்கள் பணி மிகவும் வரவேற்கத்தக்கது . 🇩🇪

நன்றி வேல்ச்சோழன்

உங்களுடைய நற்பணி தொடர வேண்டும்.தமிழ் வாழவேண்டும்.தமிழ் இந்துமதத்துடன் எவ்வாறு தொடர்பு பெற்றது.. தெளிவான ஆதாரங்கள் எவை?

பதிவுக்கு நன்றி..
அன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ ணயழவ

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More