எமது வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

தமிழ் மற்றும் தமிழர்களின் வரலாறுகளை தேடிப்பார்ப்பதற்கான சிறிய முயற்சியே இது. தமிழினம் எல்லா பக்கங்களாலும் அழிக்கப்ட்டு வரும் நிலையில் ஈழத்தில் தமிழர்களின் வரலாறு என்ன என்பதையும் எப்படி வரலாறு மாற்றபபடுகிறது என்பதையும் ஆராய்வதோடு தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர் வரலாறுகள் குறித்தும் இங்கு பேசுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். ஆவணங்கள் அல்லது நீங்கள் செவிவழியாக ஏதும் அறிந்திருந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி webkuru@gmail.com
இங்கு இணைக்கப்படும் பதிவுகளில் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

Monday, January 16, 2012

வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்_புத்தகம்

மாத்தளை சோமு எழுதிய வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் என்ற புத்தகத்தை இங்கு பகிர்ந்துள்ளேன். தமிழின் தோற்றம் தமிழர்களின் அறிவியல் தொடர்பாக பேசியிருக்கும் இந்த புத்தகத்தை படித்து பாருங்கள்.

தமிழர்களுக்கு சொந்தமான அறிவியல் மற்றும் தமிழர்களின் தொலைத்துவிட்ட அறிவியல்கள் குறித்து சிந்திக்க தூண்டும்.

இங்கு இடப்படும் பதிவுகளை இயலுமானவரை அனைவருடனும் பகிந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

எழுத்துகள் சிறிதாக இருப்பின் (இந்த பகுதியின் கீழ்பகுதியில்) Scribd இன் கீழ் பகுதியில் இருக்கும் Tool Bar இல் '+' அடையாளத்தை அழுத்தினீர்கள் என்றால் எழுத்துருக்கள் பெரிதாக்கப்படும். (இந்த தகவல் இணையத்திற்கு புதிதானவர்களுக்கு மட்டுமே)
தமிழர் அறிவியல்

Saturday, January 14, 2012

தமிழ் எப்பொழுது தோன்றியது?

குமாரிக்கண்டம் அல்லது இலமூரிக் கண்டம் என்று அழைக்கப்ட்ட நிலப்பகுதி

சைகை மொழியை  பயன்படுத்திய மனிதன் அதனை தொடர்ந்து பேச்சு மொழிக்கு மாறியிருக்கிறான். அப்படி பேச்சு மொழி உருவாகிய காலங்களில் தோன்றியிருக்க கூடிய ஒரு மொழிதான் தமிழும் என்று நம்பப்படுகிறது.

தமிழின் தோற்றம் "குமரிக்கண்டம்" அல்லது இலமூரியாக்கண்டம்" என்ற பெரும் நிலப்பரப்பை சேர்ந்த மக்களிடையில் தான் முதலில் தோன்றியது என்று நம்பப்படுகிறது.

சுமார் கி.மு 500000 ஆண்டுகளிற்கு முன்பு அவுஸ்ரேலியா தொடங்கி தென்ஆபிரிக்கா வரை விரிந்து கிடந்த (இந்தியா உள்ளிட்ட) நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம் என்று அறிஞர் ஓல்டுகாம் தெரிவித்திருக்கிறார்.

அறிஞர்களான எக்கேல் மற்றும் கிளேற்றர் ஆகியோரின் கருத்துப்படி "சாந்தா தீவுகளில்" தொடங்கி தெற்காசியாவின் தென்பகுதி வழியாக தென் ஆபிரிக்காவின் கீழ்கரை வரை ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததென்றும் அங்கு குரங்கையொத்த "இலமூரியா" (Lemuria) என்ற இனம் வாழ்ந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

(http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent) இந்த இணைப்பில் சென்று  லெமூரியா பற்றிய சில தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். )

தமிழ் மொழியானது கி.மு 500 000 ஆண்டுகளிற்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சுட்டொலிகளில் இருந்து தோன்றியது தான் தமிழ் மொழியின் ஆரம்பம்.

இன்றைய அவுஸ்ரேலியாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட தென் ஆபிரிக்காவரை பரந்து விரிந்து கிடந்த நிலப்பரபில் தனி மொழியாக தமிழ் உருவாகியிருக்கிறது என்றே சொல்லாம். தமிழ் மொழியின் தோற்றம் பற்றி சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல நூல்கள் மூலம் அறிய முடியும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

குமரிக்கண்டத்தை "பழந்தமிழ் நாடு" என்றே பல எழுத்தாளர்கள் தமது எழுதியுள்ளனர். இந்த கண்டத்தில் தனி ஆட்சியாக வாழ்ந்தவன் தான் தமிழன். அவனது நாகரிகம் தான் திராவிட நாகரிகளம் என்று சொல்லப்படுகிறது. தமிழர்களுடைய நாகரிகம் தான் உலகிலேயே பழமைவாய்ந்த நாகரிகமாக நம்பப்படுகிறது.

உலகெங்கும் தனது நாகரிகத்தை விஸ்தரித்து வைத்திருந்தான் தமிழன். அதற்கு சான்றாக "பனீசியர்களின்" நாணயங்களையும் கல்வெட்டுக்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்த குமரிக்கண்டத்தை ஆண்ட தமிழினம் கடல்கோள்களினால் அழிந்து நாசமாய் போனது.  குமரிக்கண்டத்தை நான்கு பெரும் கடல்கோள்கள் அழித்து நாசமாக்கியிருப்பதாக பதிவு செய்துள்ளார்கள்.
நான்கு பெரும் கடல் கோள்கள்

1. தென்மதுரை -கடல் கொண்டது
2.நாகநன்னாட-கடல் கொண்டது
3.கபாடபுரம்- கடல் கொண்டது
4.காவிரிப்பூம்பட்டிணம்-கடல் கொண்டது

தவிர அதிக அளவிலான சிறிய கடல் கோள்கள். இப்படிப்பட்ட பெரும் அழிவுகளினால் நிலம் சிதைக்கப்ட்டதோடு தமிழரின் வரலாற்றுக் குறிப்புகள் ஆவணங்கள் என எல்லாமே கடலுடன் கடலாகவும் மண்ணுடன் மண்ணாகவும் அழிக்கப்ட்டிருக்கிறது.

இந்த கடல்கோள்களினால் தமிழினம் மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகள் உயிரினங்கள் என எல்லாமே அழிந்தது. உலக வடிவமே மாறியது.

முதன்மை நாகரிகமான திராவிட நாகரிகத்தில் காலப்போக்கில் பல மொழிகள் உருவெடுத்தன. எல்லா திராவிடக் குடும்ப மொழிகளுமே தமிழில் இருந்து பிரிந்தவைதான் என்று சொல்கிறார்கள். இலக்கண மற்றும் இலக்கிய ஆயிரக்கணக்கான நூல்களை தமிழ் மொழி மாத்திரம் தான் ஆரம்பத்தில் வைத்திருந்தது என்று நம்பப்படுகிறது.

மா.குருபரன்
14-01-2012

நோக்கம்

 அன்பான வாசகர்களே!!

பழம் பெரும் மொழியையும் சிறப்பு மிக்க நாகரிகத்தையும் கொண்ட தமிழினத்தின் வரலாறுகளை ஆராய்வதும் செவிவழியாக அறிந்தவற்றை பதிவு செய்து ஆவணப்படுத்துவதும் தான் இந்த வலைத்தளத்தின் நோக்கம்.

ஈழம் மற்றும் தமிழக ஆர்வலர்களை இணைத்து அவர்களது சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வதற்கான முயற்சியில் தான் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழர்களின் புத்தாண்டு திருநாளாக கொண்டாடும் இன்றைய தைத்திருநாளில் இந்த வலைத்தளத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சிடைகிறேன்.

தமிழர் வரலாறுகள், தமிழின் வரலாறுகள், தமிழர் நாகரிகங்கள், தமிழர் வரலாற்று ஆவணங்கள் உங்களிடத்தில் இருப்பின் webkuru@gmail.com என்ற எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவுங்கள்.

அனைவருக்கும் எனது தைத்திருநாள் வாழ்த்துகள்

நட்புடன்
மா.குருபரன்
15-01-2012



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More